search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் ஏட்டு"

    ஆசாரிப்பள்ளம் அருகே போலீஸ் ஏட்டுவை கத்தியால் குத்திய வாலிபரை கைது செய்த போலீசார் இது குறித்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள பெருவிளையைச் சேர்ந்தவர் ராணி. நேற்று மாலை இவரது வீடு மீது 3 வாலிபர்கள் கல்வீசி தாக்கினர்.

    இதுதொடர்பாக ராணி ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் ஏட்டு செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ராணி வீடு மீது கல் வீசிய 3 வாலிபர்களையும் அவர்கள் பிடிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி 3 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களில் ஒரு வாலிபர் ஏட்டு செந்திலிடம் சிக்கிக் கொண்டார். அந்த வாலிபரை தப்பிக்க விடாமல் ஏட்டு செந்தில் மடக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் ஏட்டு செந்திலை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். செந்திலின் கையில் கத்திக்குத்து விழுந்து ரத்தம் கொட்டியது.

    அவரை உடன் வந்திருந்த போலீசார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ஏட்டு செந்தில், ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ஏட்டுவை கத்தியால் குத்தியது கீழபெருவிளையைச் சேர்ந்த பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட அஜித், மிக்கேல் என்ற வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே வீடு மீது கல்வீசியது தொடர்பாக ராணியும் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகனுடன் ஏற்பட்ட தகராறில் 3 வாலிபர்கள் எங்கள் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்த எனது மகனை அவர்கள் மிரட்டி விட்டு தொடர்ந்து கல்வீசினர்.

    எனவே அத்துமீறி நடந்து கொண்ட பிரகாஷ், அஜித், மிக்கேல் ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அந்த புகாரின் பேரிலும் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள். #tamilnews
    அரும்பாக்கத்தில் விபசார அழகியுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் ஏட்டு மீது 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #Policeconstable

    சென்னை:

    அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் ஜெயந்தி. தனது வீட்டில் வைத்தே இவர் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு பார்த்திபன் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். அடிக்கடி விபசார அழகியின் வீட்டுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயந்தியின் வீட்டுக்கு விஸ்வநாதன் என்ற வாலிபர் சென்றுள்ளார். உல்லாசம் அனுப விப்பதற்காக சென்ற அந்த வாலிபரை மிரட்டி பணம் பறிக்க அவர் திட்ட மிட்டார்.

    இதன்படி வாலிபர் விஸ்வநாதன் கொடுத்த பணம் போதாது என்று கூறி அவர் தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் இதுபற்றி போலீஸ் ஏட்டு பார்த்திபனுக்கும் தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக அரும்பாக்கத்தில் உள்ள விபசார அழகி ஜெயந்தியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் இருவரும் சேர்ந்து செக்ஸ் ஆசையில் வந்த விஸ்வநாதனை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

    அதே நேரத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அவர் மீதே குற்றம்சாட்டி அமிஞ்சிகரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் வாலிபர் விஸ்வநாதன், ஏட்டு பார்த்திபன் பற்றிய ரகசிய தகவல்களை கொட்டித் தீர்த்து விட்டார். தன்னை மிரட்டி ரூ.10 ஆயிரம் பணம் பறித்ததாகவும் 2 பேரும் சேர்ந்து திட்டமிட்டே இதில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறி இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தர விட்டார்.

    வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், அண்ணா நகர் துணை கமி‌ஷனர் சுதாகர் ஆகியோரது மேற் பார்வையில் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஏட்டு பார்த்திபனின் லீலைகள் அம்பலமானது.

    இதையடுத்து வாலிபர் விஸ்வநாதன் அளித்த புகாரின் பேரில் போலீசார் உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இதன் படி அமிஞ்சிகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் வழக்கு பதிவு செய்தார். போலீஸ் ஏட்டு பார்த்திபன், விபசார அழகி ஜெயந்தி ஆகியோர் மீது விபசாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு போடப்பட்டது.

    வாலிபர் விஸ்வநாதனை மிரட்டிய குற்றச்சாட்டின் கீழ் 2 பேர் மீதும் கொலை மிரட்டல், பணம் கேட்டு மிரட்டியது, வழப்பறி உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜெயந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    போலீஸ் ஏட்டு பார்த்திபன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஏட்டு பார்த்திபனின் செயல்பாடுகள் பற்றியும், பின்னணி குறித்தும் முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பார்த்திபனின் செல்போன் நம்பரை வைத்து அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

    கைதான விபசார அழகி ஜெயந்தி போலீசில் அளித்த வாக்கு மூலத்தில், கடந்த ஓராண்டாக ஏட்டு பார்த்திபனுடன் தொடர்பில் இருந்து வருவதாக கூறியுள்ளார்.

    விஸ்வநாதனை ஏமாற்றி பணம் பறித்தது போல இருவரும் வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அழகி ஜெயந்தி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர்தான் அரும்பாக்கம் பகுதிக்கு குடிவந்துள்ளார்.

    விபசாரத்தில் ஈடுபடுவதற்கு வசதியாகவே அவர் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பதும் உறுதியாகி உள்ளது. இது போன்று விபசாரத்தில் ஈடுபடும் பெண்களை போலீசார் குற்றவாளியாக சேர்க்க மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணாக கருதி மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பார்கள்.

    ஆனால் ஜெயந்தி விபசார தொழிலில் ஈடுபடும் எண்ணத்தில் ஏட்டு பார்த்திபனுடன் சேர்ந்தே அரும்பாக்கத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடியிருந்தது உறுதியாகி உள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ஜெயந்தி மீது விபசார வழக்கு பாய்ந்துள்ளது. ஏட்டு பார்த்திபனும் வசமாக சிக்கி விட்டார். போலீஸ் ஏட்டு ஒருவர் விபசார தொழிலில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டிருப்பது சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இச்சம்பவம் உயர் போலீஸ் அதிகாரிகளை கடும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. #Policeconstable

    கோவை அருகே போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாநகர போலீசில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் குணசேகரன்(வயது 55). இவர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த இவர் திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை அருகே போலீஸ் ஏட்டு வீட்டு பூட்டை உடைத்து ரூ.17 லட்சம் நகை-பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள கங்கை கொண்டானை அடுத்த துறையூரை சேர்ந்தவர் ஆசிர்வாதம் (வயது 65). ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு. இவரது மனைவி காஞ்சனா. கணவன்- மனைவி இருவரும் நேற்று காலை தங்களது வீட்டை பூட்டி விட்டு நெல்லை தாழையூத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் மீண்டும் நேற்று மாலையில் ஊருக்கு சென்றனர். அப்போது அவர்களது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் தங்க நகை, ரூ. 97 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிர்வாதம் கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து ரூ. 17 லட்சம் நகை-பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முதல் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி தஞ்சை பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஏட்டு மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும், கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அந்த பெண் அஜித்குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து முதல் மனைவியை விவாகரத்து செய்ய போவதாக கூறி அஜித்குமார் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தஞ்சை ஜெபமாலை புரத்தை சேர்ந்த கோகிலா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் கோகிலாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே அஜித்குமார் தனது முதல் மனைவியிடம் சமரசம் பேசி அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்த கோகிலா மற்றும் அவரது உறவினர்கள் அஜித்குமாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அஜித்குமார் முதல் மனைவியுடனும் சேர்ந்து வாழ்வேன் என்று கூறியுள்ளார்.

    இதுபற்றி 2-வது மனைவி கோகிலா வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் அஜித்குமார் முதல் மனைவியை விவாகரத்து செய்து விடுவேன் என்று தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக கூறியுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய ஏட்டு விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் ரங்கநாதன். இவர் பணியின்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து போலீஸ் ஏட்டு ரங்கநாதனை கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    கருங்கல் அருகே நள்ளிரவில் போலீஸ் ஏட்டின் காருக்கு யாரோ தீ வைத்து விட்டனர். இதில் கார் எரிந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே மேற்கு மாத்திரவிளையை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். நேற்று இரவு அவர் தனது காரை அந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். மேலும் பிளாஸ்டிக் கவரால் அந்த காரை மூடி இருந்தனர். நள்ளிரவில் திடீரென்று அந்த கார் தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்த அக்கம், பக்கத்தினர் போலீஸ் ஏட்டு வாசு தேவனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் அங்கு விரைந்து சென்று பார்த்த போது கார் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. யாரோ அந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

    உடனே பொதுமக்கள் உதவியுடன் காரில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. இதில் கார் சேதம் அடைந்தது. இது பற்றி வாசுதேவனின் மகன் தீபன்ரஞ்சன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் கார் எரிந்தது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முன் விரோத தகராறில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் ஏட்டு மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கீழ செக்கடி தெருவை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி பூமாரி(வயது50). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார்(48). இவர் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். 

    அசோக்குமாருக்கும், ராமராஜ் குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக ராமராஜின் மனைவி பூமாரிக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அசோக்குமார் பூமாரியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். 

    இது பற்றி பூமாரி சங்கரன் கோவில் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஏட்டு அசோக்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நள்ளிரவில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்த போலீஸ் ஏட்டுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    தூத்துக்குடி:

    கோவில்பட்டி புதூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலியுகவரதன் (வயது47). தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் இவர் நேற்று நள்ளிரவு டூவி புரம் 5-வது தெரு பகுதியில் சென்றார்.

    அப்போது அங்குள்ள ஒருவரது வீட்டிற்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபடி இருந்துள்ளார். இதனை அந்த வீட்டின் உரிமையாளர் கவனித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து போலீஸ் ஏட்டு கலியுகவரதனை கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    முதலில் அவர் ஏட்டு என்பது பொதுமக்களுக்கு தெரியாது. பின்பு தர்ம அடி கொடுத்த போது கலியுக வரதன் தான் போலீஸ் ஏட்டு என்பதை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    நள்ளிரவில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தது குறித்து ஏட்டு கலியுகவரதன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×